உள்நாடு

தேர்தல் திகதிக்கு எதிரான மனு பரிசீலனை ஆரம்பம்

(UTV | கொழும்பு) -ஜூன் மாதம் 20ஆம் திகதி பாராளுமன்றத் தேர்தலை நடத்துவதற்கு தேர்தல் ஆணைக்குழுவினால் பிறப்பிக்கப்பட்ட வர்த்தமானி அறிவித்தலையும்  ஜனாதிபதியினால் மார்ச் முதலாம் திகதி பாராளுமன்றத்தைக் கலைக்கும் வர்த்தமானி அறிவித்தலையும் சவாலுக்கு  உட்படுத்தி உச்ச நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டிருக்கும் அடிப்படை உரிமை மீறல் மனுக்களை பரிசீலனை செய்யும் நடவடிக்கை ஆரம்பமாகியுள்ளது.

பிரதம நீதியரசர் ஜயந்த ஜெயசூரிய  நீதியரசர்கள்  புவனெக அலுவிகார ,சிசிர ஆப்ரு ,பியந்த ஜயவர்தன, விஜித் மலல்கொட  ஆகியோர் இந்த நீதிபதிகள் குழாமில் அடங்குகின்றனர்.

இதன் பிரகாரம் 07 மனுக்களும் 09 இடைநிலை தரப்பு மனுக்களும் இன்றைய விசாரணைக்கு எடுக்கப்பட உள்ளன.

குறித்த விசாரணைகள் உச்ச நீதிமன்றத்தில்  இன்றும்(18) நாளையும் (19)  பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளபடவுள்ளது.

Related posts

“சிறிய மாற்றங்களுடன் முச்சக்கர வண்டிகளை இயக்குவதற்கு நடவடிக்கை”

‘குடு திலான்’ என்பவருக்கு மரண தண்டனை விதிப்பு

இலங்கை வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 13 இலட்சத்தை தாண்டியது

editor