உள்நாடுசூடான செய்திகள் 1

மைத்திரி தலைமையில் ஸ்ரீ.சு.கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் நாளை

(UTV | கொழும்பு) – ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம், கட்சியின் தலைவரான, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நாளை(18) கூடவுள்ளது.

கொழும்பிலுள்ள கட்சித் தலைமையகத்தில் மாலை ஐந்து மணிக்கு குறித்த கூட்டம் இடம்பெறவுள்ளதாக குறித்த கட்சியின் ஊடக பேச்சாளர் வீரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்..

இதன்போது, நாட்டின் தற்போதைய நிலவரம், கொரோனா தொற்று, அரசியல் நிலவரம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

2024 இல் இரு தேர்தல்களும் இடம்பெறும் – ஜனாதிபதி அறிவிப்பு.

ஜனாதிபதியாக ரணில் பதவியேற்று ஒருவருடம் பூர்த்தி

கல்முனை வடக்கு உப பிரதேச செயலக வழக்கு – அடுத்த வருடம் ஜனவரிக்கு ஒத்திவைப்பு!

editor