உள்நாடு

ஊரடங்குச் சட்டத்தை மீறிய 12,482 பேர் மீது வழக்கு

(UTV | கொழும்பு) – கடந்த மார்ச் மாதம் 20ஆம் திகதி தொடக்கம் இன்று  (16) காலை 6 மணி வரையிலான காலப்பகுதியில் ஊரடங்கு உத்தரவை மீறிய குற்றச்சாட்டின் கீழ் 55,706 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த காலப்பகுதியில் 15,216 வாகனங்களையும் பொலிஸார் பொறுப்பேற்றுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, ஊரடங்குச் சட்டத்தை மீறியமை தொடர்பில் 12,482 மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளதோடு, 4,808 பேருக்கு எதிராக அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும், பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தது.

Related posts

அக்கரைப்பற்று, மீரா ஓடை குளத்தில் விழுந்து 2 வயது குழந்தை பலி

editor

பாராளுமன்ற பணியாளர்களின் கோரிக்கைக்கு அமைய உணவுக்காக அறவிடப்படும் விலை மீண்டும் மறுசீரமைக்கப்பட்டது

editor

எரிபொருள் தொடர்பிலான மற்றுமொரு அனுமதி