உள்நாடு

ஜப்பானிலிருந்து 235 பேருடன் நாட்டை வந்தடைந்த விமானம்

(UTV | கொழும்பு) – ஜப்பானில் சிக்கித் தவித்த 235 இலங்கையர்கள் இன்றையதினம் சிறப்பு விமானம் மூலம் இலங்கைக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்.

இவர்கள் ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான யு. எல். 455 என்ற விமானம் மூலம் ஜப்பானின் நரீட்டா விமான நிலையத்திலிருந்து அதிகாலை 3.38 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

இப்பயணிகள் குழுவினர் விமான நிலையத்தை வந்தடைந்த பின்னர், இராணுவத்தினரால் அவர்களும் அவர்களின் பயணப் பொதிகளும் தொற்றுநீக்கம் செய்யப்பட்டன.

இப்பயணிகளுக்கு கொரோனா வைரஸ் தொற்றுநோய் தொடர்பான அறிகுறிகள் தென்படுகிறதா என்பது தொடர்பிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

அனைத்து சோதனைகளின் பின்னர், இராணுவத்தினரால் தயார்படுத்தி வைக்கப்பட்டிருந்த பஸ் வண்டியில் அவர்கள் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

Related posts

நுவரெலியாவில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் வேட்புமனு தாக்கல்

editor

அரச ஊழியர்கள் மீண்டும் அந்த தவறை செய்யக் கூடாது – வஜிர அபேவர்தன

editor

நாட்டின் ஒருமைப்பாட்டை பாதுகாக்க பெரமுனவுக்கு வாக்களிக்க வேண்டும் – சரத் வீரசேகர

editor