உள்நாடு

அநுராதபுரத்தில் 24 மணிநேர நீர் விநியோகம் தடை

(UTV|கொழும்பு) – அநுராதபுரத்தின் பல பகுதிகளுக்கு 24 மணித்தியாலங்கள் நீர் விநியோகம் தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

அநுராதபுரம், நுவரவெவ நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் அத்தியாவசிய திருத்தப்பணிகள் காரணமாகவே இவ்வாறு நீர் விநியோகம் தடைபடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, இன்று(13) இரவு 9.00 மணி முதல் நாளை(14) இரவு 9.00 மணி வரையான காலப்பகுதியில் இவ்வாறு நீர் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

அதன்படி அநுராதபுர நகரம், முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் படிகள், யாழ்ப்பாண சந்தி, குருந்தன்குளம், சாலியபுர, ரபேவ, கல்குளம் மற்றும் மிஹிந்தலை பிரதேசங்களுக்கே இவ்வாறு நீர் விநியோகம் தடை அமுல்படுத்தப்படவுள்ள

Related posts

இலங்கையில் தங்கத்திற்கு நிகராக மாறிய கரட்!

அமெரிக்காவின் உதவி இராஜாங்க செயலாளர் டொனால்ட் லு இலங்கை விஜயம்

editor

பொதிகளை அனுப்பும் நடவடிக்கைகள் இடைநிறுத்தம்