உள்நாடு

விமான நிலையம் திறப்பு தொடர்பான அறிவித்தல்

(UTV | கொழும்பு) – அடுத்த மாதம் முதல் இலங்கைக்கான விமான சேவைகளை மீண்டும் ஆரம்பிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. 

விமான சேவைகளை வழமைக்கு கொண்டுவரும் திட்டங்கள் குறித்து அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானங்கள் குறித்து கருத்து தெரிவிக்கும் போதே சுற்றுலா மற்றும் விமான சேவைகள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க  இதனைக் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நாட்டுக்குள் வருகை தரும் சகல பயணிகளையும் பரிசோதனை செய்யும் விசேட வேலைத்திட்டம் குறித்து அரசாங்கம் ஆராய்ந்து வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

கடந்த 45 நாட்களுக்கு அதிகமான காலம் விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

இலங்கைக்கு நிதியுதவி வழங்க கொரியா எக்ஸிம் வங்கி இணக்கம்

editor

இலங்கை ஜனாதிபதிக்கும் தென்னாப்பிரிக்க ஜனாதிபதிக்கும் இடையில் சந்திப்பு

editor

பெருங்கடல் பாதுகாப்புத் தலைமையகமாகிய இலங்கை!