உள்நாடு

சந்தை, விடுதிகள் மற்றும் சிற்றுண்டிச்சாலைகள் திறக்கப்படாது

(UTV | கொழும்பு) – வாராந்த மற்றும் நாளாந்த சந்தை, உடற்பயிற்சி நிலையங்கள், களியாட்ட விடுதிகள் மற்றும் சிற்றுண்டிச்சாலைகள் ஆகியன நாளை (11) திறக்கப்படாது என பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

தனிமைப்படுத்தல் சட்டத்தின் விதிமுறைகளை மீறுபவர்களுக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுப்பதற்கு அரசு தீர்மானித்துள்ளது. இதன்படி இந்தச் சட்டத்தை மீறும் நபருக்கு 2 வருடங்கள் கடூழியச் சிறைதண்டனை விதிக்கப்படக்கூடும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தனிமைப்படுத்தல் சட்டம் உட்பட ஊரடங்கு தளர்வின்போது நடந்துகொள்ளவேண்டிய விதம் பற்றி விபரிக்கும் வர்த்தமானி அறிவித்தல் சுகாதார அமைச்சால் இன்று ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்படவுள்ளது.

Related posts

ஜனாதிபதி வேட்பாளர் யார்? – மொட்டு கட்சியுடன் ஜனாதிபதி விசேட கலந்துரையாடல்

‘மக்களின் 70 சதவீத சேமிப்பை ராஜபக்ஷ திருடிவிட்டார்’

one day passport ஒருநாள் சேவையில் கடவுச்சீட்டு பெறுபவர்களுக்கான அறிவித்தல்