உள்நாடு

எதிர்வரும் 11ம் திகதி முதல் ஊழியர்களுக்கு விஷேட போக்குவரத்து சேவைகள்

(UTV |கொவிட் 19) – எதிர்வரும் 11ம் திகதி முதல் அரச மற்றும் தனியார் பிரிவு சேவையாளர்கள் கடமைகளுக்கு சமூகமளிப்பதற்காக பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்தவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

இலங்கை போக்குவரத்து சபையின் போக்குவரத்து பிரிவு பிரதி பொதுமுகாமையாளர் ஏ.எச்.பண்டுக இதனை தெரிவித்துள்ளார்.

அந்தந்த நிறுவனங்களினால் விடுக்கப்பட்ட கோரிக்கைகளுக்கமைய பிரதான வீதிகள் சிலவற்றில் பேருந்துக்களை சேவையில் ஈடுபடுத்தவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, ரயில் போக்குவரத்து தொடர்பில் இன்றைய தினம் கலந்துரையாடி தீர்மானம் ஒன்றை எட்ட ரயில்வே திணைக்களம் தீர்மானித்துள்ளதாக ரயில்வ போக்குவரத்து அதிகாரி வீ.எஸ். பொல்வத்தகே தெரிவித்திருந்தார்.

Related posts

இலங்கையிலும் கொவிட் தடுப்பூசி திட்டம் தற்காலிகமாக நிறுத்தம்

சீன பிரதமர் லீ கெக்யோங் இலங்கைக்கு

எரிபொருள் விநியோக நடவடிக்கைகள் துரிதகதியில்..