உள்நாடு

கொரோனாவால் பாதிக்கப்பட்ட முதலாவது கடற்படை வீரர் குணமடைந்தார்

(UTV | கொவிட் 19) – இலங்கையில் கொரோனா  தொற்றினால் பாதிக்கப்பட்ட முதலாவது கடற்படை வீரர் முழுமையாக குணமடைந்துள்ளார்.

கடந்த 25 ஆம் திகதி கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர் என அடையாளம் காணப்பட்ட குறித்த கடற்படை உறுப்பினர் ஐ.டி.எச். வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவந்தார்.
இந்நிலையில் அவர் குணமடைந்து வெளியேறியுள்ளார் என்றும் அவர் இப்போது 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவர் என்றும் கடற்படை தெரிவித்துள்ளது.

அதன்படி தற்போது வரை 187 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதேவேளை,  இதுவரை 718 பேர் இலங்கையில் கொரோனா நோயாளிகளாக அடையாளங் காணப்பட்டுள்ளனர்.

இவர்களில் 7 பேர் உயிரிழந்துள்ள நிலையில் தற்போது 524 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts

கதிரை சின்னத்தில் களமிறங்க ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி நடவடிக்கை

editor

தேசிய மக்கள் சக்திக்கு அரசியல் அனுபவம் இருந்தாலும் அரசாங்கம் நிர்வகித்த அனுபவம் இல்லை – சாகல ரத்நாயக்க

editor

சஹ்ரானின் மாமனார் உள்ளிட்ட மூவர் CID இனால் கைது