உள்நாடுசூடான செய்திகள் 1

லண்டனில் இருந்து நாடு திரும்பிய 207 இலங்கை மாணவர்கள்

(UTV|கொழும்பு) – லண்டனில் நிர்க்கதிக்குள்ளாகியிருந்த 207 இலங்கை மாணவர்கள் விசேட விமானம் மூலம் இன்று(04) அதிகாலை நாட்டிற்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்.

குறித்த மாணவர்கள் இலங்கை விமான சேவைக்கு சொந்தமான UL 504 எனும் விமானத்தில் இன்று அதிகாலை 3.30 அளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றன.

நாட்டை வந்தடைந்த மாணவர்கள் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு இராணுவத்தினரால் அழைத்து செல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றன.

இதேவேளை, லண்டனில் நிர்க்கதிக்குள்ளாகியுள்ள மற்றுமொரு இலங்கை மாணவர்கள் குழுவினரை நாட்டிற்கு அழைத்துவருவதற்காக ஶ்ரீ லங்கன் விமான சேவையின் விசேட விமானம் ஒன்று அங்கு சென்றுள்ளது.

Related posts

பெற்றோல் விலை அதிகரிப்பு!!

மக்களின் நிலம் மக்களுக்கே சொந்தம் – மண்டைதீவு விடயத்திலும் மாற்றமில்லை – ஈ.பி.டி.பி வலியுறுத்து!

அமைச்சர் ஆனந்த விஜேபாலவின் செயலாளர் போல் நடித்து பொலிஸ் நிலையத்திற்கு அழைப்பெடுத்த நபர் கைது

editor