உலகம்

இத்தாலியில் முடக்க நிலை கட்டுப்பாடுகளை தளர்த்த நடவடிக்கை

(UTV | கொவிட் – 19) – கொரோனா வைரஸ் தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்ட இத்தாலியில், கடந்த மார்ச் மாத மத்தியில் அமுல்படுத்தப்பட்ட முடக்க நிலை விரைவில் தளர்த்தப்படவுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

சுமார் 07 வாரங்களுக்கு பிறகு, எதிர்வரும் 04ஆம் திகதி முதல் இத்தாலியில் முடக்க நிலை கட்டுப்பாடுகள் சில தளர்த்தப்படுவதாக அந்நாட்டின் பிரதமர் அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மக்கள் தங்கள் உறவினர்களை சந்திக்க முகக்கவசங்களோடு சிறு குழுக்களாக செல்லலாம் என்பது உள்ளிட்ட அறிவிப்புகளை அவர் வெளியிட்டுள்ளார்.

பூங்காக்கள் திறந்திருக்கும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், பள்ளிகள் செப்டம்பர் மாதம் வரை திறக்கப்படாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இத்தாலியில் இதுவரை 28, 236 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை தொடர்ந்து பயன்படுத்துவது குறித்து நாங்கள் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளோம் – பிரித்தானியா

editor

மருத்துவமனைக்கு செல்வது எங்கள் உயிர்களிற்கு ஆபத்தை தேடும் விடயம் – காசா கர்ப்பிணிகள்

வழமைக்கு நிலைக்கு திரும்பும் சீனாவின் வுஹான் நகரம்