உள்நாடு

தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கு இடையே மற்றுமொரு கலந்துரையாடல்

(UTV | கொழும்பு) – தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கு இடையே மற்றுமொரு கலந்துரையாடல் இன்று(02) பிற்பகல் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது எதிர்வரும் பொதுத்தேர்தலை ஜூன் மாதம் 20ஆம் திகதி நடத்துவது தொடர்பில் விரிவாக ஆராயப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாட்டில் நிலவும் தற்போதைய சூழ்நிலையை கருத்திற்கொண்டு பொதுத்தேர்தலை நடத்துவது குறித்து சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஏற்கனவே ஆலோசனைகளை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, தேர்தல்கள் ஆணைக்குழுவின் அங்கத்தவரும், தவிசாளருமான மஹிந்த தேசப்பிரியவுக்கும், அரசியல் கட்சிகளின் செயலாளர்களுக்கும் இடையிலான கல்ந்துரையாடல் ஒன்று இன்று முற்பகல் இடம்பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

இன்று இடியுடன் கூடிய மழை

editor

அகில இலங்கை கிராமிய கலை ஒன்றிய விருது விழா : UTV ஊடகவியலாளர் இருவருக்கு விருதுகள்

அஜித் பிரசன்னவுக்கு மீண்டும் விளக்கமறியல்