உள்நாடு

நாடு முழுவதும் திங்கட்கிழமை ஊரடங்குச் சட்டம் நீக்கம்

(UTV | கொவிட்-19) – தற்பொழுது அமுல்படுத்தப்பட்டுள்ள பொலிஸ் ஊரடங்குச் சட்டம் எதிர்வரும் திங்கட்கிழமை (27)  அதிகாலை 5.00 மணிக்கு நீக்கப்படும் என, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் அறிவித்துள்ளது.

நாட்டின் சகல பிரதேசங்களிலும் குறிப்பாக கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம் மாவட்டங்கள், கேகாலை மாவட்டத்தின் வரக்காபொல, கண்டி மாவட்டத்தின் அலவத்துகொடை, அம்பாறை மவாட்டத்தின் அக்கரைப்பற்று  பொலிஸ் பிரிவுகளில் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வந்த ஊரடங்கு சட்டம் திங்கட்கிழமை நீக்கப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, கொழும்பு கம்பஹா களுத்துறை புத்தளம் மாவட்டங்களுக்குள் நுழைவது மற்றும் அங்கிருந்து வெளியேறுவது அனைவருக்கும் முற்று முழுதாக தடை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

இலஞ்சம் பெற்ற உப பொலிஸ் பரிசோதகர் கைது

editor

உலகின் முதல் புதிய முகக்கவசங்கள் அடுத்த வாரங்களுக்குள்

TNAஐ மீண்டும் சந்திக்கும் ஜனாதிபதி ரணில்