உலகம்

பிலிப்பைன்ஸில் ஊரடங்கு சட்டம் மே 15 வரை நீடிப்பு

(UTV|கொழும்பு)- பிலிப்பைன்ஸில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் எதிர்வரும் மே மாதம் 15ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

பிலிப்பைன்ஸில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து வருகின்ற நிலையில், இதனைக் கடுப்படுத்தும் நோக்கிலேயே ஊரடங்கு சட்டம் நீடிக்கப்பட்டதாகவும் அந்த நாட்டு அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிலிப்பைன்ஸில் இதுவரையான காலப்பகுதியில் 494 பேர் உயிரிழந்துள்ளதுடன், 7,294 பேர் கொரோனா வைரஸினால் பாதிக்கபப்ட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

ஐக்கிய அரபு அமீரகத்தில் புதிய தொழிலாளர் விதிகள்

ஓமிக்ரோனை விட அதிக ஆபத்தான மற்றுமொரு திரிபு

கொரோனா வைரஸ் – உலக அளவில் உயிரிழப்பு 60 ஆயிரத்தை கடந்தது