உள்நாடுசூடான செய்திகள் 1

கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இருந்த மேலும் 5 பேர் பூரண குணம்

(UTV|கொழும்பு)- இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் ஐந்து பேர் பூரண குணமடைந்து வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளனர்

அதற்கமைய நாட்டில் குணமடைந்துள்ளவர்களின் எண்ணிக்கை 91 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

இதேவேளை, இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 254 ஆக உள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அத்துடன், கொரோனா வைரஸ் தொற்றினால் நாட்டில் இதுவரை 07 பேர் உயிரிழந்துள்ளனர்.

Related posts

ஐ.தே.க. தேசிய அமைப்பாளராக சாகல

பால் மாவுக்கான விலைகள் குறைப்பு

தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு இன்று முதல் மேலதிக அதிகாரம்