உலகம்

சீனாவில் மூடப்பட்டது கொரோனா மருத்துவமனை

(UTV|கொவிட்19)- சீனாவில் இரண்டே வாரங்களில் கொரோனா தொற்று நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க கட்டப்பட்ட மருத்துவமனைகளில் ஒன்று தற்போது மூடப்படுவதாக அந்நாடு அறிவித்துள்ளது.

சீனாவில் இரண்டே வாரங்களில் கொரோனா தொற்று நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க வுஹானில் இரண்டு மருத்துவமனைகள் கட்டப்பட்டது.

அதில் ஒன்றான லைஷென்சன் மருத்துவமனை தற்போது மூடப்படுவதாக அந்நாடு அறிவித்துள்ளது.

அங்கு கொரோனா சிகிச்சை பெற்று வந்த கடைசி சில நோயாளிகள் வீடு திரும்பியதை அடுத்து அந்த மருத்துவமனை மூடப்பட்டது.

கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு என பிரத்யேகமாக கட்டப்பட்ட அந்த தற்காலிக மருத்துவமனை தற்போதைக்கு இடிக்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

இதுவரை 231 ஊடகங்கள் மூடப்பட்டுள்ளன

குவைத்தில் நாளை முதல் ஊரடங்கு

அடங்கினார் இளவரசர் சார்லஸ்