உலகம்

கொரோனா வைரஸால் உலகளாவிய ரீதியில் 17 இலட்சத்துக்கும் அதிகமானவர்கள் பாதிப்பு

(UTV|கொழும்பு)- கொரோனா வைரஸ் காரணமாக உலகளாவிய ரீதியில் 1,781,383 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக  தெரிவிக்கப்படுகிறது.

அத்தோடு, உலகளாவிய ரீதியில் 108,864 பேர் உயிரிழந்துள்ளதுடன் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து இதுவரை 404,569 பேர் முற்றாக குணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, அமெரிக்கா, இங்கிலாந்து, இத்தாலி மற்றும் பிரான்ஸ் போன்ற நாடுகளில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்துக் காணப்படுகின்றது.

இதற்கமைய, அமெரிக்காவில் மாத்திரம் இதுவரை 533,115 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, நேற்றைய தினம் மாத்திரம் உலகளாவிய ரீதியில் 6 ஆயிரத்து தொள்ளாயிரத்து 73 பேர் உயிரிழந்துள்ளதாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

Related posts

2034ஆம் ஆண்டு உலகக் கிண்ண காற்பந்தாட்ட தொடர் சவூதி அரேபியாவில்

editor

வங்கக்கடலில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

editor

இந்தியாவில் தீவிரமடையும் கொரோனா