உள்நாடு

கொழும்பின் சில பிரதேசங்களில் நீர் வெட்டு

(UTV|கொழும்பு)- கொழும்பின் சில பிரதேசங்களுக்கு இன்று(07) பிற்பகல் 2 மணி முதல் இரவு 10 மணி வரை 8 மணித்தியால நீர் விநியோகத்தடை அமுல்படுத்தப்பட உள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

அதன்படி, கொழும்பு 09, கொழும்பு 14 மற்றும் நவகம்புர ஆகிய பகுதிகளுக்கு இவ்வாறு நீர்வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளதுடன் கொழும்பு 15 பகுதியில் குறைந்த அளவிலேயே நீர் விநியோகம் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

கொவிட் 19 பரம்பலின் வேகம் முன்னரை விட அதிகம்

இன்று கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் மத்திய நிலையங்கள்

மைத்திரியை அழைக்க தயாராகிய CID!