உள்நாடுசூடான செய்திகள் 1

தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்த 217 பேர் வெளியேற்றம்

(UTV|கொழும்பு)- தனிமைப்படுத்தல் நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ள  மேலும் 217 பேர் இன்று(06) வெளியேற்றப்படவுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இவ்வாறு தனிமைப்படுத்தலுக்குட்படுத்தப்பட்ட குறித்த நபர்களுக்கு கொரொனா தொற்று ஏற்படவில்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அவர்கள் வெளியேற்றப்படவுள்ளதாகவும் இராணுவத் தளபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, தனிமைப்படுத்தல் நிலையங்களில் தங்கவைக்கப்பட்டிருந்த 3,169 பேர் இதுவரை வெளியேறியுள்ளதாக இராணுவ தளபதி தெரிவித்துள்ளார்.

அத்துடன்  கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக  சந்தேகிக்கப்படும் மேலும் பலர்  தியத்தலாவை மற்றும் மட்டக்களப்பு தனிமைப்படுத்தல் நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளியான தகவல்!

ஊரடங்கு சட்டத்தை மீறிய 52 பேர் கைது

பிரதமருடன் அமைச்சர் ரிஷாட் வடக்குக்கு பயணம்