உலகம்

இரட்டைக் குழந்தைக்கு கொரோனா, கோவிட் என பெயரிட்ட பெற்றோர்

(UTVNEWS | INDIA) –   இந்தியாவில் சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரை சேர்ந்த இளம் தம்பதியொன்று தங்களுக்கு பிறந்த இரட்டைக் குழந்தைகளுக்கு கொரோனா, கொவிட் என பெயரிட்டுள்ளனர்.

உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த ப்ரீத்தி வர்மா தனது கணவருடன் சத்தீஸ்கர் மாநிலம் ராய்பூரில் ​வேலை  நிமித்தமாக வாடகை வீட்டில் வசித்து வருகின்றார்.

நிறைமாத கர்பிணியான ப்ரீத்தி வர்மா கொரோனா காரணமாக ஊரடங்கு உத்தரவால் குழந்தை பிறக்கும் தருவாயில் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகியுள்ளார்.

ராய்பூர் அரசு வைத்தியசாலையில் ப்ரீத்தி வர்மாவிற்கு இரட்டை குழந்தை பிறந்துள்ளது. பல சிரமங்களை கடந்து தனக்கு குழந்தை பிறந்ததால் இரட்டை குழந்தைகளுக்கு கொரோனா – கோவிட் என பெயர் சூட்டியுள்ளார்.

இதேவேளை, உத்தரபிரேதேசத்தில் பிறந்த ஆண்குழந்தைக்கு லோக் டவுன் எனவும், பெண் குழந்தைக்கு கொரோனா எனவும் பெயர் சூட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 5 மில்லியனை கடந்தது

அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி

‘ஈரான் பயணம் உலக அரங்கில் புதின் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதை காட்டுகிறது’