உலகம்

கொரோனா வைரஸ் – இந்தியாவில் 1251 பேருக்கு பாதிப்பு-

(UTV|கொழும்பு) – இந்தியாவில் 1251 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நேற்று இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியது. பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1251 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 49 பேர் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள். பலியானோரின் எண்ணிக்கை 32 ஆக அதிகரித்துள்ளதுடன்,102 பேர் குணமடைந்துள்ளனர்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக 21 நாள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது,

Related posts

ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதிகள் நடத்த இருந்த சதி திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளது

ஆப்கான் கல்விக் கூடத்தில் குண்டு தாக்குதல் – 18 பேர் உயிரிழப்பு

ட்ரம்ப் குடும்பத்தை விட்டு விலக மறுக்கும் கொரோனா