உலகம்

கொரோனா வைரஸ் – 38 ஆயிரத்தை நெருங்கியது பலி எண்ணிக்கை

(UTV|கொழும்பு) – உலகின் 200 நாடுகளுக்கு கொரோனா வைரஸ் பரவி உள்ள நிலையில், இந்த வைரசுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 38 ஆயிரத்தை நெருங்கி உள்ளது.

பல்வேறு நாடுகளில் இந்த வைரஸ் தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

இன்று காலை நிலவரப்படி, உலகம் முழுவதும் 7 லட்சத்து 85 ஆயிரத்து 797பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 37 ஆயிரத்து 816 பேர் உயிரிழந்துள்ளனர்.

வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை ஒரு லட்சத்து 65 ஆயிரத்து 607பேர் குணமடைந்துள்ளனர்.

இதேவேளை, இத்தாலியில் கொரோனா தாக்குதலுக்கு நேற்று ஒரே நாளில் மட்டும் 812 பேர் உயிரிழந்துள்ளனர். ஸ்பெயின் நாட்டில் ஒரே நாளில் மட்டும் 913 உயிரிழந்துள்ளனர்.

கொரோனாவால் இத்தாலியில் தான் அதிக உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை இத்தாலியில் 11 ஆயிரத்து 591 பேர் உயிரிழந்துள்ளனர். அதற்குஅடுத்த இடங்களில் ஸ்பெயின் 7716 பேர் சீனாவில் 3305 பலி ஆகிய நாடுகள் உள்ளன. அமெரிக்காவில் 3164 பேரும், பிரான்சில் 3024 பேரும், ஈரானில் 2757 பேரும், பிரிட்டனில் 1408 பேரும் உயிரிழந்துள்ளனர்.

Related posts

சிலி, ஆர்ஜன்டீனாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை

editor

IMF இன் இரண்டாவது கடன் தவணை தாமதம்!

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு பேசும் போது எழுந்து சென்ற பிரதிநிதிகள் – வெறிச்சோடிய போதும் பேசினார்

editor