உள்நாடு

வேலையற்ற பட்டதாரிகளை வைத்திய அதிகாரி அலுவலகங்களில் இணைக்க நடவடிக்கை

(UTV|கொழும்பு ) – நாட்டில் கொரோனா அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ள நிரலயில் வேலையற்ற பட்டதாரி பயிற்சியாளர்களை கொரோனா வைரஸ் தொற்று ஒழிப்பு கடமைகளுக்காக சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகங்களில் இணைத்துக் கொள்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அந்தவகையில், வேலையற்ற பட்டதாரி பயிற்சியாளர்களை வைத்திய அதிகாரி அலுவலகங்களில் இணைத்துக் கொள்ளல் மற்றும் சேவைக்கு சமூகமளித்தல் தொடர்பாக அரச நிர்வாக அமைச்சு தீர்மானித்துள்ளது.

இது தொடர்பிலான ஏனைய அறிவித்தல்கள் வெகுவிரைவில் வெளியிடப்படும் என அமைச்சின் செயலாளர் எஸ்.ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

Related posts

திங்கள் முதல் நாடளாவிய ரீதியில் சேதன பசளை விநியோகம்

அரவிந்த டி சில்வாவுக்கு வழங்கப்படவுள்ள உயரிய அங்கீகாரம்!

ஆட்டோவுக்குள் எரிந்த நிலையில் காணப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தரின் சடலம்!

editor