உள்நாடுசூடான செய்திகள் 1

அரசு பொதுமக்களுக்கு விசேட அறிவிப்பு

(UTVNEWS | COLOMBO) -நாடு முழுவதும் அமுல் படுத்தப்பட்டுள்ள ஊரங்கு உத்தரவு விதிகளை முறையாக கடைபிடிக்குமாறு அரசாங்கம் பொது மக்களுக்கு அறிவித்துள்ளது.

நாட்டில் மிக பாரிய சுகாதார சவாலாக கொரோனா தொற்று பரவுவதினாலாயே ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது என ஜனாதிபதி ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள காலப்பகுதியில் அத்தியாவசியப் பொருட்களை வீடுகளுக்கு அனுப்புவதற்கான நடவடிக்கையில் அதற்காக நியமிக்கப்பட்டுள்ள செயலணி செயற்பட்டு வருவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே, ஊரடங்கு சட்டம் அமுலிலுள்ள காலத்தில் வெளியே செல்ல வேண்டாம் என அரசாங்கம் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது.

Related posts

பண்டாவளை – பூனாகலை கபரகல மண்சரிவு

நாட்டில் 31,000 பேரே வரி செலுத்துகின்றனர்!

சம்பிக்க ரணவக்க தொடர்பில் கலந்துரையாடல்