கிசு கிசு

மொட்டு கட்சியில் வாய்ப்பை இழந்த தில்ஷான் (PHOTO)

(UTVNEWS | COLOMBO) –   திலகரட்ன தில்ஷான், எதிர்வரும் பொதுத் தேர்தலில் காலி மாவட்டத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி சார்பில் போட்டியிடலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், நேற்றைய தினம்  ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி வேட்பாளர் பட்டியலை காலி மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரி சோமரத்ன வித்தியாபதிரனவிடம் நேற்று கையளித்தது.

இதில் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் திலகரட்ன தில்ஷான் பெயர் உள்ளடக்கப்படவில்லை.

தில்ஷான் சில மாதங்களுக்கு முன்னர், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவை சந்தித்து ஸ்ரீங்கா பொதுஜன முன்னணியில் இணைந்து அங்கத்துவத்தை பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts

வீடுகளுக்காக மக்களின் மனங்களை மாற்றும் அரசியல்வாதிகள் தொடர்பில் கருத்து

அவுஸ்திரேலிய பிரதமர் மீது முட்டை வீசிய பெண்

பாலியல் ரீதியிலான இணையத்தளங்கள் அனைத்தும் முடக்கம்