உள்நாடு

மேலும் நான்கு பேர் ஐ.டி.எச் வைத்தியசாலையில் அனுமதி

(UTV|கொழும்பு) – போலாந்தில் இருந்து இலங்கை வந்த 4 சுற்றுலாப்பயணிகள் கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் கொழும்பு ஐ.டி.எச் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த சுற்றுலாப்பயணிகள் இலங்கையில் இருந்து புறப்பட்டுச் செல்லும் போது விமான நிலையத்தில் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இதன்போது, குறித்த சுற்றுலாப் பயணிகளுக்கு கொரோனா அறிகுறி தென்பட்டுள்ளதை தொடர்ந்து இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Related posts

இலங்கை சர்வதேச நிதிச் சந்தையில் இணையவில்லை – ஹர்ஷ டி சில்வா எம்.பி

editor

கடந்த 24 மணித்தியாலயத்தில் 843 : 03

அமெரிக்க உயர்மட்ட இராஜதந்திர குழுவினர் ஜனாதிபதியினை சந்தித்தனர்