உள்நாடுசூடான செய்திகள் 1

கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை கட்டுப்படுத்த உதவுங்கள்

(UTV|கொழும்பு) – தேசிய பொறுப்பாக கருதி உயிர் அச்சுறுத்தல் மிக்க கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை கட்டுப்படுத்த உதவுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

பொறுப்பற்ற முறையில் நடந்து கொள்வதன் மூலம் நாடு என்ற வகையில் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க வேண்டியிருக்குமெனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

ஜனாதிபதி செயலகத்தில் நேற்று(11) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

உலகின் பல்வேறு முக்கிய நாடுகள் கட்டுப்படுத்த முடியாத வகையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு முகங்கொடுத்துள்ளன. குறித்த நிலையில் இருந்து மக்களை பாதுகாப்பதற்காக ஆரம்பிக்கப்பட்டுள்ள நோய்த் தடுப்பு நடவடிக்கைகளுக்கு அனைவரினதும் ஒத்துழைப்பு அவசியமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அவசர எச்சரிக்கை

editor

கொழும்பில் இரட்டிப்பாகும் டெங்கு நோயாளிகள்

குற்றச்சாட்டை நிராகரிக்கும் அமைச்சர்