உலகம்

உலக அளவில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை உயர்வு

(UTV|கொழும்பு)- சீனா மட்டுமின்றி உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டு உலகம் முழுவதும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நான்காயிரத்தை தாண்டியது.

சீனாவில் நேற்று மேலும் 17 பேர் பலியானதை அடுத்து அங்கு உயிரிழப்பு 3136 ஆக உயர்ந்துள்ளது. உலக அளவில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 4011 ஆக உயர்ந்திருப்பதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

சீனாவுக்கு வெளியே இத்தாலி நாடு அதிக உயிரிழப்பை சந்தித்துள்ளது. இதுதவிர ஈரான், தென்கொரியா அமெரிக்கா ஆகிய நாடுகளிலும் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். ஒரு லட்சத்து 10 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Related posts

“நேட்டோ நாடுகள் அமைப்பில் உக்ரைன் சேர விரும்பவில்லை” – ஜெலன்ஸ்கி திடீர் அறிவிப்பு

இந்தியா – பாகிஸ்தான் தாக்குதல்களை நிறுத்த இணக்கம் – அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவிப்பு

editor

சவூதி மன்னரின் சொந்த நிதியில் 1,000 பலஸ்தீனர்களுக்கு ஹஜ் கடமையை நிறைவேற்ற வாய்ப்பு

editor