உள்நாடு

ஐதேக முரண்பாடுகளை நீக்க இன்று மற்றுமொரு கலந்துரையாடல்

(UTV|கொழும்பு) – ஐக்கிய தேசியக் கட்சியினுள் நிலவும் முரண்பாடுகள் தொடர்பில் இன்றைய தினம் (10) கலந்துரையாட உள்ளதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரணில் விக்கிரமசிங்க தரப்பினர் மற்றும் சஜித் பிரேமதாச ஆகிய தரப்பினர் இடையே நேற்றைய தினம் (09) முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரியவை சந்தித்து தற்போதைய நிலைமை தொடர்பில் கலந்துரையாடி இருந்த போதிலும் குறித்த கலந்துரையாடல் தீர்மானமின்றி நிறைவு பெற்றிருந்தது.

எவ்வாறாயினும், இதன்போது இறுதி தீர்மானம் ஒன்று எட்டப்படாத நிலையில் மற்றுமொரு கலந்துரையாடல் எதிர்வரும் சில தினங்களில் இடம்பெறும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

நாளை 4 மணித்தியாலங்கள் 30 நிமிடங்களுக்கு மேல் மின்வெட்டு

யாழ்ப்பாணத்தில் விபச்சார வீடு முற்றுகை – நால்வர் கைது

தொழிலதிபரின் வீட்டில் 55 கிலோ தங்கம் கண்டுபிடிப்பு!

editor