உள்நாடு

புத்தகாயா யாத்திரை பயணங்களுக்கு தடை

(UTV|கொழும்பு) – இலங்கையிலிருந்து அதிகமான பௌத்தர்கள் தரிசிக்கச் செல்லும், இந்தியாவின் புத்தகாயா யாத்திரைப் பயணங்களை தற்காலிகமாக இடைநிறுத்துமாறு, குறித்த யாத்திரை தொடர்பில் ஏற்பாடுகளைச் செய்யும் நிறுவனங்கள், சம்பந்தப்பட்ட அதிகாரிகளை தெளிவுப்படுத்தும் நடவடிக்கையை புத்தசாசன அமைச்சு முன்னெடுத்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று வேகமாகப் பரவி வருவதால், இந்நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதென, புத்தசாசன அமைச்சின் செயலாளர் பந்துல ஹரிச்சந்திர மேலும் தெரிவித்தார்.

Related posts

15 வயதுடைய இரு மாணவிகள் ஆலய கேணியில் தவறி விழுந்து உயிரிழப்பு

editor

தடைகளை உடைப்பதில் அரசாங்கம் உறுதியாக உள்ளது – பிரதமர் ஹரிணி

editor

ரணிலுக்கு பிணை வழங்க சட்டமா அதிபர் திணைக்களம் கடும் எதிர்ப்பு!

editor