உள்நாடு

பேஸ்புக் களியாட்ட நிகழ்வு ; 77 பேர் கைது

(UTVNEWS | COLOMBO) –பேஸ்புக் களியாட்ட நிகழ்வு ஒன்றின்போது 77 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பன்னிப்பிட்டிய பொலிஸார்  தெரிவித்துள்ளனர்.

குறித்த நிகழ்வு பன்னிப்பிட்டிய பகுதியில் இடம்பெற்றுள்ளது.

குறித்த நிகழ்வில் 60 இளைஞர்கள் உட்பட 17 யுவதி கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களிடமிருந்து கஞ்சா மற்றும்  போதை மருந்து மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பன்னிப்பிட்டிய பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

Related posts

 2022  ஆண்டுக்கான மூன்றாம் தவணை கல்விநடவடிக்கை இன்று ஆரம்பம்

இலங்கையின் பொருளாதார மறுமலர்ச்சிக்கு சீனாவின் தொடர்ச்சியான ஒத்துழைப்பிற்கு பாராட்டு

சிக்கலான புதிய திரிபுகளை அடையாளம் காண DNA பரிசோதனை