உள்நாடு

பல்கலைக்கழக அனுமதிக்கான கையேடுகள் வௌியீடு

(UTV|கொழும்பு) – 2019 ஆம் கல்வியாண்டிற்கு மாணவர்களை பல்கலைக்கழகங்களில் இணைத்துக்கொள்வதற்கான கையேடுகளை இன்று(05) முதல் பெற்றுக்கொள்ள முடியும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

புத்தக விற்பனை நிலையங்களில் மாணவர்களுக்கான கையேடுகளை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் குறித்த கையேடுகள், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ இணையத்திலும் பிரசுரிக்கப்பட்டுள்ளதாக ஆ​ணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க கூறியுள்ளார்.

மேலும், கையேடுகளில் குறிப்பிட்டுள்ள அறிவுறுத்தல்களை நன்கு ஆராய்ந்ததன் பின்னர், பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிக்குமாறு பேராசிரியர் சம்பத் அமரதுங்க மாணவர்களை கேட்டுக் கொண்டுள்ளார்.

Related posts

பிணை முறி மோசடி தொடர்பில் சட்ட மா அதிபர் குற்றப்பத்திரம் தாக்கல்

இலங்கையில் ஆண்களை விட பெண்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

editor

மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் மகிழ்ச்சியான தகவலை வெளியிட்டார் அமைச்சர் பிமல் ரத்நாயக்க

editor