விளையாட்டு

நான்காவது போட்டியிலும் இந்திய மகளிர் அணி வெற்றி

(UTV|கொழும்பு)- இருபதுக்கு -20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில், இந்திய மகளிர் அணி தனது நான்காவது லீக் ஆட்டத்தில் இலங்கை அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 113 ஓட்டங்களை எடுத்தது.

இதையடுத்து 114 ஓட்டங்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி மந்தனா 17 ரன்களில் ஆட்டமிழந்தார்.

இந்தியா 32 பந்துகள் மீதமிருந்த நிலையில், 116 ஓட்டங்கள் எடுத்து, 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

23 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய ராதா யாதவ், ஆட்ட நாயகியாக தேர்வு செய்யப்பட்டார்.

Related posts

இலங்கைக்கு வெண்கலப் பதக்கத்தை பெற்றுக்கொடுத்தார் அனுஷா

ஒலிம்பிக் போட்டியில் பார்வையாளர்களுக்கு அனுமதி மறுப்பு

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு 341 என்ற வெற்றி இலக்கு