உலகம்

ஜப்பானில் பாடசாலைகளைத் தற்காலிகமாக மூட உத்தரவு

(UTV|ஜப்பான் ) – எதிர்வரும் மார்ச் மாதம் வரை ஜப்பானில் உள்ள அனைத்து பாடசாலைகளையும் மூடுமாறு ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே வலியுறுத்தியுள்ளார்.

ஜப்பானின் கொரோனா வைரஸ் பரவலின் அச்சம் காரணமாகவே இவ்வாறு அனைத்து பாடசாலைகளுக்கும் மார்ச் மாதம் வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

ஜப்பானில் இதுவரை 800 க்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவற்றில் 700 க்கும் மேற்பட்டோர் டயமண்ட் பிரின்சஸ் கப்பலில் அடையாளம் காணப்பட்டனர்.

ஜப்பானில் இதுவரை கொரோனா தொற்றினால் 7 பேர் உயிரிழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

பிரான்ஸில் மீண்டும் முழு ஊரடங்கு

ஊரடங்கு முழுமையாக அமுலுக்கு

தமிழகத்தில் 17 இடங்களில் தடுப்பூசி ஒத்திகை