உள்நாடு

வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

(UTV|கொழும்பு)- 2019 ஆம் ஆண்டு வாக்காளர் இடாப்பிற்கு அமைய, ஒரு கோடியே 62 இலட்சத்து 63 ஆயிரத்து 885 பேர் வாக்காளர்களாக பதிவு செய்யப்பட்டுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

2018 ஆம் ஆண்டு வாக்களார் இடாப்பில் ஒரு கோடியே 59 இலட்சத்து 96 பேர் மாத்திரமே பதிவு செய்யப்பட்டிருந்தனர்.

இதன்படி, நாட்டில் 271,789 வாக்காளர்கள் அதிகரித்துள்ளனர்.

கம்பஹா மாவட்டத்திலேயே அதிகூடிய வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், வன்னி மாவட்டத்தில் குறைந்தபடியான வாக்காளர்கள் பதிவாகியுள்ளனர்.

2019 ஆம் ஆண்டு வாக்காளர் இடாப்பிற்கு அமைய, காலி மாவட்டத்திலிருந்து பாராளுமன்றத்திற்கு தெரிவாகக்கூடிய உறுப்பினர்களின் எண்ணிக்கை பத்திலிருந்து ஒன்பதாகக் குறைவடைந்துள்ளது.

Related posts

இடைக்கால கணக்கறிக்கை மீதான இரண்டாவது நாள் விவாதம் இன்று

 சுதந்திர தினத்தில் சிசுவுக்கு நடந்த சோகம்

நாட்டில் கொரோனா தொற்றுள்ளோரின் எண்ணிக்கை 102 ஆக உயர்வு