உள்நாடு

ராஜகிரிய பகுதியில் தீ பரவல்

(UTV|கொழும்பு)- ராஜகிரிய – புத்கமுவ வீதியில் பெரேரா மாவத்தைக்கு அருகில் உள்ள சேற்றுநில பகுதியில் தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

குறித்த தீயினை கட்டுப்படுத்துவதற்காக தீயணைப்பு வாகனங்கள் நான்கு அனுப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இருப்பினும், குறித்த பகுதிக்கு தீயணைப்பு வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டதையடுத்து, தீயைக் கட்டுப்படுத்துவதற்கு இலங்கை விமானப் படைக்கு சொந்தமான பெல்-212 ரக ஹெலிகொப்டர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக விமானப்படை பேச்சாளர் குரூப் கெப்டன் துஷான் செனவிரத்ன குறிப்பிட்டார்.

Related posts

பிரதமர் தவிர்ந்த ஒட்டுமொத்த அமைச்சரவையும் பதவி விலகுகிறது

கொரோனாவிலிருந்து மேலும் 293 பேர் குணமடைந்தனர்

ரஞ்சனுக்கு மன்னிப்பு வழங்க கோரி சந்திரிக்காவினால் ஜனாதிபதிக்கு கடிதம்