உள்நாடுசூடான செய்திகள் 1

சாய்ந்தமருது நகர சபை விசேட வர்த்தமானி இரத்து

( UTVNEWS| COLOMBO) –கல்முனை மாநகர சபையின் கீழ் இயங்கி வந்த சாய்ந்தமருது பிரதேசம் தனியான நகர சபையாக பிரகடனப்படுத்தப்பட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மீளப்பெறப்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது.

குறித்த அதிவிசேட வர்த்தமானி கடந்த வெள்ளிக்கிழமை (14) பொது நிருவாக உள்நாட்டு அலுவல்கள் மற்றும் உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோனின் கையொப்பத்துடன் வெளியாகியிருந்தது.

இந்த நிலையில் நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த விவகாரம் தொடர்பில் எழுந்த சர்ச்சையால் அந்த அதிசிறப்பு வர்த்தமானி அறிவிப்பு பொதுநிருவாக உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரால் மீளப்பெறப்பட்டுள்ளது.

இந்த தகவலை அமைச்சரவை இணைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்த்தன இன்று (20) காலை ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தார்.

Related posts

பிரதேச சபையின் தவிசாளர் கைது

இலங்கை தனது முதலாவது குரங்கு அம்மை நோயை உறுதிப்படுத்தியது

21 வயதுடைய இளைஞன் உயிரிழப்பு – பூகொட OIC விளக்கமறியலில்