விளையாட்டு

மேற்கிந்தியத்தீவுகளுடனான தொடரிலிருந்து தனுஷ்க விலகல்

(UTV|கொழும்பு) – மேற்கிந்தியத்தீவுகள் அணியுடனான ஒருநாள் மற்றும் இருபதுக்கு – 20 கிரிக்கெட் தொடர்களிலிருந்து இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரர் தனுஷ்க குணதிலக்க விலகியுள்ளார்.

முதுகுப் பகுதியில் ஏற்பட்ட உபாதை காரணமாகவே அவர் இவ்வாறு இத் தொடரிலிருந்து விலகியுள்ளார்.

இந்நிலையில், தனுஷ்க குணதிலக்கவுக்குப் பதிலாக ஷெஹன் ஜயசூரிய அணியில் இணைத்துக் கொள்ளப்படுவார் என இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமை தேர்வாளர் அசாந்தா டி மெல் தெரிவித்துள்ளார்.

Related posts

ICC சிறந்த வீரருக்கான விருதை பெற்ற வனிந்து ஹசரங்க!

டெஸ்ட் தொடரிலிருந்து பும்ரா விலகல்

ராஜஸ்தான் ரோயல்ஸ் உடன் மோதிய சென்னைக்கு திரில் வெற்றி…