உலகம்

பாகிஸ்தான் தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் 7 பேர் பலி

(UTV|கொழும்பு) – பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் 7 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதன்போது, 25 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மதப் பேரணி ஒன்று இடம்பெற்றுக் கொண்டிருந்த போதே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது.

எனினும், இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்தவொரு குழுவும் பொறுப்பேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

மற்றுமொரு கொடிய நோய் குறித்து WHO எச்சரிக்கை

“எங்களுக்கு இலங்கை வேண்டாம்” தற்கொலைக்கு முயலும் வியட்நாமிலுள்ள இலங்கையர்கள்

COVID 19 : சுமாா் 6.6 கோடி பேருக்கு தொற்று