விளையாட்டு

சீனா கிராண்ட் பிரிக்ஸ் பந்தயம் ஒத்திவைப்பு

(UTV|சீனா) – கொவிட் – 19 என பெயரிடப்பட்டுள்ள கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்திவரும் நிலையில் சீனாவில் நடத்த திட்டமிடப்பட்டிருந்த பர்முயுலா-1 கார்பந்தய தொடரின் நான்காவது சுற்று ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

ஆண்டின் நான்காவது சுற்றான சீனா கிராண்ட் பிரிக்ஸ் பந்தயம், எதிர்வரும் மாதம் 15ஆம் திகதி ஷாங்காய் நகரில் நடைபெற திட்டமிடப்பட்டிருந்தது.

இந்த நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பு நீண்ட நாட்களாக இருக்கும் என அஞ்சப்படுவதால், சீனா கிராண்ட் பிரிக்ஸ் பந்தயம், ஒத்திவைக்கப்பட்டுள்ளது. எனினும், இந்த பந்தயம் எப்போது மீண்டும் நடைபெறும் என அறிவிக்கப்படவில்லை.

Related posts

இன்சமாமின் உடல் நிலை வழமைக்கு

2022 உலக கிண்ண கால்பந்து போட்டிகள் கட்டாரில்

CWG 2022 : சரித்திரத்தில் தடம் பதித்தார் யுபுன்