உள்நாடு

இராணுவ உயரதிகாரி உட்பட்ட 21 பேர் கைது

(UTV|கிளிநொச்சி) – கிளிநொச்சி – தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கட்டைக்காடு பகுதியில், புதையல் தோண்ட முற்பட்ட இராணுவ உயரதிகாரி உட்பட்ட 21 பேரை, விசேட அதிரடிப்படையினர், இன்று (09) கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து புதையல் தோண்டுவதற்கான பூஜை பொருள்கள், ஸ்கானர் இயந்திரம் உள்ளிட்ட பல பொருள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இவ்வாறு கைதுசெய்யப்படவர்களில் 5 இராணுவ அதிகாரிகளும் 5 இராணுவ வீரர்களும், 13 சிங்களவர்களும் 3 தமிழர்களும் உள்ளடங்குகின்ற​னரென, தர்மபுரம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related posts

மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பை நீக்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை – சட்டத்தரணி மனோஜ் கமகே

editor

இலங்கையில் புதிய வீசா திட்டங்கள் அறிமுகம்!

கொரோனா வைரஸ் – 1701 பேர் தனிமைப்படுத்தப்பட்ட நிலையங்களில்