உள்நாடு

நாளை சில பகுதிகளுக்கு நீர்வெட்டு

(UTV|கம்பஹா )- கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை(07) காலை 9 மணி தொடக்கம் 18 மணித்தியாலங்களுக்கு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

களனி ஆற்றின் தெற்கு கரை அபிவிருத்தி செயற்றிட்டத்தின் இரண்டாம் கட்ட நடவடிக்கைகளுக்காக நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, கட்டுநாயக்க, சீதுவ, ஜா-எல, ஏக்கல, கந்தான, ஆனியாகந்த, துடெல்ல, மா-எலிய, கெரவலப்பிட்டிய, வெலிசர, மாபொல, அல்பிட்டிய, மாபாகே மற்றும் திக்கோவிட்ட உள்ளிட்ட பகுதிகளுக்கே நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.

Related posts

கல்வி நடவடிக்கைகள் தொடர்பில் புதனன்று இறுதித் தீர்மானம்

இன்று காலை கந்தானையில் துப்பாக்கிச் சூடு

editor

வர்ண ஸ்டிக்கர் ஒட்டும் நடவடிக்கை இன்று