உள்நாடு

ஒரு கோடி பெறுமதியான கேரள கஞ்சாவுடன் நபரொருவர் கைது

(UTV|யாழ்ப்பாணம்) – யாழ்ப்பாணம் மல்லாகம் பகுதியில் சுமார் ஒரு கோடி பெறுமதியான கேரள கஞ்சாவுடன் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் குறித்த நடவடிக்கைகளுக்காக கடற்படையினரின் உதவியைப் பெற்றதாகவும் வட மாகாண பிரதி மதுவரி ஆணையாளர் பிரபாத் ஜயவிக்ரம தெரிவித்துள்ளார்

கைது செய்யப்பட்ட நபர் இந்தியாவிலிருந்து இவ்வாறு கேரள கஞ்சாவினை நாட்டுக்குள் கொண்டு வருவதற்கு முயற்சித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

மேலும் கைது செய்யப்பட்ட நபர் ஏற்கனவே இவ்வாறான குற்றச்சாட்டுக்களில் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

ஷானி அபேசேகரவுக்கான விளக்கமறியல் நீடிப்பு

தபால் அலுவலகங்களை திறப்பது குறித்து விசேட கலந்துரையாடல்

பேஸ்புக் விருந்துபசாரம் – 15 இளம் பெண்கள் உட்பட 76 பேர் கைது

editor