உள்நாடு

ஒரு தொகை வெளிநாட்டுச் சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது

(UTV|கொழும்பு)- சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டுச் சிகரெட்டுகளை இன்று அதிகாலை டுபாயிலிருந்து இலங்கைக்கு கொண்டு வந்த குற்றச்சாட்டில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த கைது செய்யப்பட்ட நபரின் பயணப் பொதியை விமான நிலைய சுங்க அதிகாரிகள் சோதனைக்கு உட்படுத்தியபோது,
நபரிடமிருந்து 15 இலட்சத்து 76 ஆயிரம் ரூபாய் பெறுமதியான வெளிநாட்டுச் சிகரெட்டுகளை சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

47 வயதுடைய இச்சந்தேகநபர், கண்டி பிரதேசத்தைச் சேர்ந்தவர் என விசாரணையில் தெரியவந்துள்ளது.

Related posts

பொதுமக்களுக்கு பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

அரசிடம் இன்னும் சரியான திட்டம் இல்லை – எமக்கு உதவுமாறு பிரதமர் மோடியிடமும் கேட்டுக் கொண்டேன் – சஜித் பிரேமதாச

editor

ஈழ யுத்தம், காசா யுத்தம் இரண்டும் அப்பாவி மக்களின் பேரழிவில் ஒத்துப்போகின்றன – மனோ கணேசன் எம்.பி

editor