உள்நாடு

கொழும்பின் சில வீதிகளுக்கு நாளை பூட்டு

(UTV|கொழும்பு) – 72 ஆவது தேசிய சுதந்திர தின கொண்டாட்ட ஒத்திகை நடவடிக்கைகள் காரணமாக நாளை (03) வீதிகள் சில மூடப்படவுள்ளன.

அதன்படி, நிதஹஸ் மாவத்தை, வித்யா மாவத்தை, மெட்லன் பிளேஸ், மெட்லான் கிரசன்ட், சீ.டபிள்யூ.பி கண்ணங்கர மாவத்தை, மார்கஸ் பெர்ணான்டோ மாவத்தை, பதனம் வீதி, விஜேராம வீதி ஹோர்டன் சுற்றுவட்டம் வரை நாளை காலை 7 மணி முதல் மதியம் 12 வரை மூடப்படவுள்ளது.

அதன் காரணமாக மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொதுமக்களிடமும் சாரதிகளிடமும் கோரிக்கை விடுப்பதாக பொலிஸ் தலைமையகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு குறிப்பிட்டுள்ளது.

Related posts

ஆர்ப்பாட்டம் காரணமாக காலி வீதிக்கு பூட்டு

AstraZeneca-விற்கு இரண்டாவது டோஸாக Pfizer தடுப்பூசி

சில அத்தியாவசிய பொருட்களின் இறக்குமதிக்கு அனுமதி