உள்நாடுசூடான செய்திகள் 1

சுதேச வைத்திய முறைகள் குறித்து ஆராய ஜனாதிபதி பணிப்பு

(UTV|கொழும்பு) – உயிர் அச்சுறுத்தல்மிக்க கொரொனா வைரஸைக் கட்டுப்படுத்துவதற்கான சுதேச வைத்திய முறைகள் குறித்தும் ஆராயுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளார்.

உலகின் பல நாடுகளிலும் பரவி வரும் கொரொனா வைரஸைக் கட்டுப்படுத்தும் முன்னெடுப்புகள் இலங்கையில் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், அந்த வைரஸினைக் கட்டுப்படுத்துவதற்காக மேற்கத்தேய வைத்திய முறைகளுடன், சுதேச வைத்திய முறைகள் குறித்தும் ஆராயுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆலோசனை வழங்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

இன்று முதல் 50% மாணவர்களுடன் விரிவுரை

எரிபொருளில் மின்சாரம் தயாரிப்பதை நிறுத்த நடவடிக்கை

தேசிய பூங்காக்களை வழமைப்போல் பார்வையிட அனுமதி