உள்நாடு

கண்களினுடாக பரவும் கொரோனா வைரஸ் – தேசிய கண் வைத்தியசாலையின் முக்கிய அறிவித்தல்

(UTV|கொழும்பு) – கொரோனா வைரஸ் கண்களில் தொற்றுவதற்கு அதிக வாய்ப்புக்கள் உள்ளதாக தேசிய கண் வைத்தியசாலையின் கண் தொழில்நுட்பவியலாளர் சமித் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸின் தாக்கம் 23 நாடுகளில் காணப்படுவதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் இலங்கையிலும் கொரோனா வைரஸ் தொற்றினை தடுப்பதற்கு பல முன்னெச்சரிக்கையை அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது.

இந்நிலையிலேயே கொரோ வைரஸ் தொற்று தொடர்பாக கண் தொழில்நுட்பவியலாளர் சமித் ரத்நாயக்க மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது, “கொரோனா வைரஸ் தொற்றிய ஒருவர் தும்மினால், இருமினால் அல்லது எச்சில் துப்பினால் ஆரோக்கியமாக இருக்கும் நபரொருவரின் கண் ஊடாக உடலுக்குள் செல்லும் ஆபத்து காணப்படுகின்றது.

இதனால் வைரஸ் தொற்றில் இருந்து பாதுகாத்துக்கொள்ள முககவசம் பயன்படுத்துவதும் பயனற்ற ஒன்றாக மாறி வருகின்றது.

இதனால் மக்கள் அனைவரும் தங்களது ஆரோக்கியம் தொடர்பாக மிகுந்த அவதானம் செலுத்த வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.

Related posts

அரிசி தொடர்பில் சதொசவின் அறிவிப்பு

editor

முன்னாள் ஜனாதிபதிகளின் விவகாரத்தில் அரசாங்கம் பாதாள குழுக்களை போல் சண்டித்தனமாக செயற்பட கூடாது – மனோஜ் கமகே

editor

ஆசிரியர் நியமனம் வழங்குமாறு கோரி கவனயீர்ப்பு போராட்டம்

editor