உள்நாடு

கொழும்பில் விசேட போக்குவரத்துத் திட்டம் அமுல்

(UTV|கொழும்பு) – 72 ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டத்தின் ஒத்திகை காரணமாக கொழும்பு சுதந்திர சதுக்கத்தை அண்மித்த பகுதிகளில் விசேட போக்குவரத்துத் திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, நாளை(31) மற்றும் எதிர்வரும் 2, 3ஆம் திகதிகளில் விசேட போக்குவரத்துத் திட்டம் அமுல்படுத்தப்படுவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

குறித்த இந்த தினங்களில் காலை 6 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை கொழும்பு சுதந்திர சதுக்கத்தை அண்மித்த சில வீதிகள் முழுமையாக மூடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏனைய சில வீதிகளில் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படும் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related posts

இலங்கையில் வசதி குறைந்த பாடசாலைகளை அபிவிருத்தி செய்ய தனது குடும்ப சொந்த நிதியில் 100 கோடி ரூபாய்களை ஒதுக்கிய பாத்திமா சலீம்

editor

ரவி – அர்ஜூன் பிணையில் விடுதலை

நாட்டின் தற்போதைய அரசியல் சூழ்நிலை குறித்து தேர்தல் ஆணையம் கவலை