உள்நாடு

கொரோனா : மருத்துவ பரிசோதனை அறிக்கை இன்று

(UTV|கொழும்பு) – ஐ.டி.எச் எனப்படும் தேசிய தொற்று நோயியல் நிறுவகத்தில், கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ள சீன பெண்ணுடன் மேலும் 8 பேர் சிகிச்சைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று(28) பலப்பிட்டி பகுதியில் சிகிச்சை பெறுவதற்காக சென்ற விருந்தகத்தில் பணியாற்றும் பெண் ஊழியர் ஒருவர் தேசிய தொற்று நோயியல் நிறுவகத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் அந்த மருத்துவமனையின் மருத்துவர் ஒருவர் கருத்து தெரிவிக்கையில், இவ்வாறு சிகிச்சை பெறுபவர்களில் 7 பேரும் சீன பிரஜைகள் என குறிப்பிட்டார்.

இந்நிலையில், குறித்த ஏழு பேர் தொடர்பான மருத்துவ பரிசோதனை அறிக்கை, இன்று(29) பிற்பகல் அளவில் கிடைக்கப்பெறும் என்றும் அவர் தெரிவித்தார்.

இதனூடாக, அவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதா என்பதனை கண்டறிய முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

ஆசன எண்ணிக்கைக்கு அமைய பயணிப்பதற்கு இன்று முதல் அனுமதி

சில மாவட்டங்களில் நாளை தளர்த்தப்படவுள்ள ஊரடங்கு சட்டம்

 தங்கத்தின் இன்றைய நிலவரம்