உள்நாடு

அதிகளவான டெங்கு நோயாளர்கள் கொழும்பு மாவட்டத்தில் பதிவு

(UTV| கொழும்பு) – வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் நாடளாவிய ரீதியில் 5 ஆயிரத்து 249 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகளவானோர் கொழும்பு மாவட்டத்திலேயே இனங்காணப்பட்டுள்ளதுடன், குறித்த மாவட்டத்தில் மாத்திரம், 937 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், யாழ்ப்பாண மாவட்டத்தில் 573 பேரும், கம்பஹா மாவட்டத்தில் 307 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு குறிப்பிட்டுள்ளது.

Related posts

விமான வான் சாகச கண்காட்சி பிரதமரின் தலைமையில் நிறைவு

ஜனாதிபதி மாறினாலும், அரசாங்கம் மாறினாலும் ரணில் விக்கிரமசிங்க இணக்கப்பாடு கண்ட சர்வதேச நாணய நிதிய உடன்படிக்கையே இன்னும் அமுலில் உள்ளது – எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

editor

அன்று ஹிட்லர் செய்ததும் தவறுதான் – இன்று இஸ்ரேல் செய்வதும் தவறுதான்.